Thiyagalingam
Quick Facts
Biography
இ. தியாகலிங்கம் (பிறப்பு: 1967) என்பவர் ஈழத்துப் புதின, சிறுகதை எழுத்தாளராவார். இவர் காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார்.
வாழ்க்கைச் சுருக்கம்
தியாகலிங்கம் இலங்கையின், காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1967 ஆம் ஆண்டில் வேலுப்பிள்ளை இரத்தினம், இரத்தினம் பரமேஸ்வரி ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த இவர்ஆரம்பக் கல்வியை காரைநகர் யா/யாழ்ற்றன் கல்லூரியின் கனிஸ்ர பிரிவிலும், தொடர்ந்து சாதாரண தரத்தையா/யாழ்ற்றன் கல்லூரியிலும், உயர்தரத்தை காரைநகர் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். 1984 ஆம் ஆண்டில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து ஈழப்போராட்டத்தில் பங்குபற்றினார்.
அங்கு இருக்கும் போதே முகாமில் வெளியிடப்பட்ட கையெழுத்துப் பிரதிகளிலும், தமிழீழமாணவர் பேரவையால் வெளியிடப்பட்ட சஞ்சிகையிலும் இவரது படைப்புகள் வெளிவந்தன.
பின்பு நோர்வேயில் மேற்கொண்டு படித்துக் கணினிப் பொறியியலாளரானஇவர், அங்கிருந்து தனது எழுத்துப்பணியை 1987 தொடக்கம்செய்து வருகிறார். இவரது சில கவிதைகள் முதலில் இராணி, வீரகேசரி போன்றவற்றிலும் நோர்வே மொழியில் எழுதப்பட்ட கவிதைகள் பின்மார்க்கன் என்னும் பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டன. அத்தோடு நோர்வேயில் இருந்து வெளிவந்த சுவடுகளில் சிறுகதைகளும், சர்வதேசதமிழரில் நாவல்களும் பிரசுரிக்கப்பட்டன. இவரது முக்கிய படைப்புக்களாக புதினங்களே உள்ளன.
படைப்புகள்
- அழிவின் அழைப்பிதழ் (1994) – புதினம்
- நாளை (1999) – புதினம்
- பரதேசி (2008) – புதினம்
- வரம் (2009) – குறுநாவல் தொகுதி
- துருவத் துளிகள் (2009) – கவிதைத்தொகுதி
- திரிபு (2010) – புதினம்
- எங்கே (2011) – புதினம்
- ஒரு துளி நிழல் (2014) - புதினம்
- பாராரிக்கூத்துக்கள் (2014) – புதினம்
- மானிடம் வீழ்ந்ததம்மா (2015) – புதினம்
- சர்வ உரூபிகரம் (2016) – புதினம்
- அரங்கத்தில் நிர்வாணம் (2016) – புதினம்
- வப்பு நாய்(2016) – சிறுகதை, குறுநாவல் தொகுதி
- துருவத்தின் கல்லறைக்கு (2016) – புதினம்
- காமமே காதலாகி(2016) – புதினம்
- மொழியா வலிகள் பகுதி-1(2018) – புதினம்
- மொழியா வலிகள் பகுதி-2(2018) – புதினம்
- மொழியா வலிகள் பகுதி-3(2018) – புதினம்
- மொழியா வலிகள் பகுதி-4(2018) – புதினம்
- புத்தரின் கடைசிக் கண்ணீர் (2019) – சிறுகதை, குறுநாவல் தொகுதி
- நெருஞ்சி முள்ளு(2019) – இரு சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் அடங்கிய தொகுப்பு
மேற்கோள்கள்
2. ஆவணகம்பார்த்த நாள் 18 சூலை 2019.
3. மானிடம் வீழ்ந்ததம்மா பார்த்த நாள் 22 சூலை 2019.
4. மானிடம் வீழ்ந்ததம்மா பார்த்த நாள் 22 சூலை 2019.
5. நாளை பார்த்த நாள் 22 சூலை 2019.
6. சர்வ உரூபிகரம் பார்த்த நாள் 22 சூலை 2019.
7. பாராரிக்கூத்துக்கள் பார்த்த நாள் 22 சூலை 2019.
8. எங்கே பார்த்த நாள் 22 சூலை 2019.