Info-farmer
Quick Facts
Biography
உறைவிட விக்கிமீடியர்கள் (அல்லது விக்கிப்பீடியர்கள்) என்போர் ஒரு நிறுவனத்துடன் இணைந்து விக்கிப் பணியாற்ற நேரம் ஒதுக்கும் விக்கிமீடியர்கள் ஆவர். இக்குறிப்பிட்ட காலத்துக்கான ஊக்கத்தொகையினைப் பொதுவாக அந்நிறுவனத்தின் மூலமாகவோ விக்கிமீடியா அறக்கட்டளை அல்லது கிளைகள் மூலமாகவோ பெற்றுக் கொள்வர். முழுக்கத் தன்னார்வமாகச் செயல்படுவோரும் உளர். இவர்கள் வெறுமனே அந்நிறுவனத்துக்குள் இருந்து விக்கிமீடியா திட்டங்களுக்குப் பங்களிப்பவர்கள் அல்ல. மாறாக, தங்கள் உறைவிடப் பணி முடிந்த பிறகும் கூட அந்நிறுவனமும் அதன் பணியாளர்களும் தொடர்ந்து விக்கிமீடியா திட்டங்களுக்குப் பங்களிக்கும் வகையில் விக்கிமீடியா இயக்கம், அதன் கொள்கைகள் பற்றிய அறிமுகத்தையும் பயிற்சியையும் வழங்குவர். தொடக்கக் காலத்தில், காட்சிக்கூடங்கள், நூலகங்கள், பெட்டகங்கள், அருங்காட்சியகங்கள் (GLAM) போன்ற நிறுவனங்களிலேயே உறைவிட விக்கிமீடியர்கள் பணியாற்றினார்கள். தற்போது, பல்வேறு வகையான நிறுவனங்களும் உறைவிட விக்கிமீடியர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு, Wikipedian in Residence - Wikimedia Outreach பக்கத்தைக் காணுங்கள்.
User:Info-farmer
- தகவல் உழவன்
- வாக்குகள் : (49/0/0)
- பணிக் காலம் : அக்டோபர் 2015 முதல் மார்ச்சு 2016 வரை (6 மாதங்கள்)
- செய்த பணிகள் c:Category:Tamil-Wikimedia-TVA-partnership, 3 ,00,000 பக்கங்களுக்கு எழுத்துணரியாக்கம் (OCR) செய்யப்பட்டன, த.இ. க பணியாளர்களுக்கு பயிற்சி, சில கல்வியகங்களுக்கு விக்கிப்பயிற்சி.
தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாகத் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான பல்வேறு வளர்ச்சி வாய்ப்புகளை நிறைவேற்றும் பொருட்டு ஒருவர் முழுநேரமாக அந்நிறுவனத்தோடு இணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளது. இதன் பொருட்டு, தகவல் உழவன் இப்பொறுப்பை ஏற்க முன்வந்து அக்டோபர் 1, 2015 முதல் செயற்பட்டு வருகிறார். இப்பொறுப்பு முதற்கட்டமாக மார்ச்சு 31, 2016 வரை ஆறு மாத காலத்துக்கு இருக்கும். அதன் பிறகு, கூட்டு முயற்சியின் விளைவுகளில் உறைவிட விக்கிமீடியரின் பங்கு, தொடர் பணிக்கான தேவையைப் பொருத்து இப்பொறுப்பு நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. அவ்வாறு நீட்டிக்கப்படும் போது மீண்டும் இங்கு தெரிவித்து சமூக ஒப்புதலைப் பெற்றுத் தொடர்வோம். இதற்காக மாதம் இந்திய உரூபாய் 30,000/- ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இதற்கான பகுதி நிதி ஆதரவை விக்கிமீடியா இந்தியா அளிக்கும். எஞ்சிய நிதியை விக்கிமீடியா அறக்கட்டளையிடம் நல்கை வேண்டலாக கோரிப் பெற வேண்டும். இந்நல்கை வேண்டலில் இவருடைய பணியை இன்னும் சிறப்பாகவும் திறமாகவும் செயற்படுத்துவதற்கான இதர செலவுகளும் அடங்கும். எடுத்துக்காட்டுக்கு, தட்டச்சு உதவியாளர்கள் அல்லது குறைந்த விலை ஒளிவருடிக் கருவிகள் இச்செலவில் அடங்கலாம். இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இனங்கண்டுள்ளபடி, பின்வரும் புலங்களில் தகவல் உழவனின் பணி அமையும்:
- பொது நிறுவனங்கள் கட்டற்ற ஆக்க உரிமங்களை ஏற்பதற்கான கொள்கை முனைவுகள்
- காட்சிக்கூடங்கள், நூலகங்கள், பெட்டகங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றில் மின்னாவணமாக்கல் (GLAM)
- பரப்புரை
கடந்த இரு மாதங்களாக அவர் முன்னெடுத்துள்ள முயற்சிகளின் விளைவாகப் பல்வேறு நூல்களைப் பொதுக்கள உரிமம் அல்லது தக்க கட்டற்ற படைப்பாக்க பொதும உரிமத்தில் எதிர்பார்த்துள்ளோம். அதேவேளை, முதற்கட்டப் பணியாக நாம் இரு ஆண்டுகள் முன்பு கொடையாகப் பெற்ற 20 தொகுதிகள் கலைக்களஞ்சியங்களையும் விக்கிமூலத்தில் பதிவேற்றும் பணியில் முனைந்துள்ளார்.
மிகத் தாமதமாகவே இதனைச் சமூகத்தின் கவனத்துக்கும் ஒப்புதலுக்கும் வைப்பதற்கான முழுப் பொறுப்பினை நான் ஏற்றுக் கொள்கிறேன். கள நிலவரங்களைப் புரிந்து கொண்டு நடைமுறைச் சாத்தியங்களுக்கு உட்பட்டு இப்பொறுப்பு மூலம்என்னென்ன பணிகளைச் செய்து முடிக்க முடியும் என்று அறிந்து கொள்ள இந்த இரு மாத காலம் தேவைப்பட்டது. எனவே, தகவல் உழவனின் இப்பொறுப்பினை வழிமொழிந்து ஆதரவு அளிக்குமாறு தமிழ் விக்கிச் சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறேன். அருள்கூர்ந்து உங்கள் கேள்விகள், ஐயங்களைக் கருத்துகள் பகுதியில் தெரிவிக்க வேண்டுகிறேன். இவ்வாக்கெடுப்பு நவம்பர் திசம்பர்6 2015 11:59 UTC க்கு முடியும். நன்றி.--இரவி (பேச்சு) 11:34, 29 நவம்பர் 2015 (UTC)
- என்னை முன்மொழிந்தமைக்கு நன்றி. இப்பொறுப்பை ஏற்கிறேன். நம் தமிழ் விக்கிப்பீடியர்களின் எண்ணங்களை உள்வாங்கி, அப்புரிந்துணர்வு ஒப்பந்தபடியும், முடிந்தவரை கட்டற்ற மென்பொருட்களின் திறனோடும் செயற்படுவேன்.--த♥உழவன்12:57, 29 நவம்பர் 2015 (UTC)
ஆதரவு (Support)
- ஆதரவு--ThIyAGU 06:56, 1 திசம்பர் 2015 (UTC)
- --நந்தகுமார் (பேச்சு) 11:41, 29 நவம்பர் 2015 (UTC)
- ஆதரவு--Kanags11:53, 29 நவம்பர் 2015 (UTC)
- --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:28, 29 நவம்பர் 2015 (UTC)
- --ஸ்ரீதர் (பேச்சு) 13:19, 29 நவம்பர் 2015 (UTC)
- --மதனாகரன் (பேச்சு) 14:01, 29 நவம்பர் 2015 (UTC)
- --மயூரநாதன் (பேச்சு) 17:38, 29 நவம்பர் 2015 (UTC)
- --உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 05:55, 30 நவம்பர் 2015 (UTC)
- --Rtssathishkumar (பேச்சு) 07:08, 30 நவம்பர் 2015 (UTC)
- சண்முகம்ப707:12, 30 நவம்பர் 2015 (UTC)
- ஆதரவு--Commons sibi (பேச்சு) 07:13, 30 நவம்பர் 2015 (UTC)
- ஆதரவு--Semmal50 (பேச்சு) 08:06, 30 நவம்பர் 2015 (UTC)
- ஆதரவு --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:58, 30 நவம்பர் 2015 (UTC)
- ஆதரவு-- இந்த பணிக்கு இவர் சரியானவராகவே கருதுகிறேன். --பாலாஜி (பேச்சு) 09:09, 30 நவம்பர் 2015 (UTC)
- ஆதரவு-- சில ஆண்டுகளுக்கு முன்பே முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டியது. இப்பொழுதாவது நடைபெறுவதையிட்டு மகிழ்ச்சி. கோபி (பேச்சு) 09:29, 30 நவம்பர் 2015 (UTC)
- ஆதரவு -- சுந்தர்10:33, 30 நவம்பர் 2015 (UTC)
- ஆதரவு --Chandravathanaa (பேச்சு) 10:53, 30 நவம்பர் 2015 (UTC)
- -- மாதவன் ( பேச்சு ) 11:14, 30 நவம்பர் 2015 (UTC)
- ஆதரவு--MTSudar (பேச்சு) 12:42, 30 நவம்பர் 2015 (UTC)
- ஆதரவு--Booradleyp1 (பேச்சு) 12:51, 30 நவம்பர் 2015 (UTC)
- -நீச்சல்காரன் (பேச்சு) 14:38, 30 நவம்பர் 2015 (UTC)
- --♥ ஆதவன் ♥ 。◕‿◕。14:47, 30 நவம்பர் 2015 (UTC)
- ஆதரவு----Jambolik (பேச்சு) 15:15, 30 நவம்பர் 2015 (UTC)
- ஆதரவு--பயனர்:கி.மூர்த்தி --கி.மூர்த்தி 15:34, 30 நவம்பர் 2015 (UTC)
- ஆதரவு--Kottalam (பேச்சு) 16:41, 30 நவம்பர் 2015 (UTC)
- ஆதரவு --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 17:02, 30 நவம்பர் 2015 (UTC)
- ஆதரவு --செல்வா (பேச்சு) 18:08, 30 நவம்பர் 2015 (UTC)
- ஆதரவு Pazha.kandasamy (பேச்சு) 18:47, 30 நவம்பர் 2015 (UTC)
- ஆதரவு --த.சீனிவாசன் (பேச்சு) 20:52, 30 நவம்பர் 2015 (UTC)
- ஆதரவு ----கலை (பேச்சு) 21:06, 30 நவம்பர் 2015 (UTC)
- ஆதரவு --Natkeeran (பேச்சு) 22:27, 30 நவம்பர் 2015 (UTC)
- ஆதரவு --அருளரசன் (பேச்சு)Arulghsr (பேச்சு) 04:04, 1 திசம்பர் 2015 (UTC)
- ஆதரவு --சிவகோசரன் (பேச்சு) 05:43, 1 திசம்பர் 2015 (UTC)
- ஆதரவு--ஹிபாயத்துல்லா (பேச்சு) 08:47, 1 திசம்பர் 2015 (UTC)
- ஆதரவு--அன்புமுனுசாமி (பேச்சு) 15:33, 01 திசம்பர் 2015 (UTC)
- ஆதரவு--கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 15:45. 1 டிசம்பர் 2015 (UTC)
- ஆதரவு--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:58, 2 திசம்பர் 2015 (UTC)
- ஆதரவு--பயனர்:அப்துல் றஸ்ஸாக் (பேச்சு) 12ː40, 2 டிசம்பர் 2015 (UTC)
- ஆதரவு-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:39, 2 திசம்பர் 2015 (UTC)
- ஆதரவு--இரா.பாலா (பேச்சு) 13:15, 3 திசம்பர் 2015 (UTC)
- ஆதரவு--Meykandan (பேச்சு) 16:25, 4 திசம்பர் 2015 (UTC)
- ஆதரவு--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:13, 5 திசம்பர் 2015 (UTC)
- ஆதரவு----குறிஞ்சி (பேச்சு) 08:33, 5 திசம்பர் 2015 (UTC)
- ஆதரவு--மணியன் (பேச்சு) 12:08, 5 திசம்பர் 2015 (UTC)
- ஆதரவு---☤சி.செந்தி☤19:53, 5 திசம்பர் 2015 (UTC)
- ஆதரவு--சோடாபாட்டில் 03:26, 6 திசம்பர் 2015 (UTC)
- ஆதரவு--Thamizhpparithi Maari (பேச்சு) 10:10, 6 திசம்பர் 2015 (UTC)
- ஆதரவு--முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 16:04, 6 திசம்பர் 2015 (UTC)
- உதவி பெறத் தகுதி உடையவர் எனச் சான்றளிக்கிறேன் --Sengai Podhuvan (பேச்சு) 17:44, 6 திசம்பர் 2015 (UTC)
- ஆதரவு--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:57, 6 சனவரி 2016 (UTC)
நடுநிலை (Neutral)
எதிர்ப்பு (Oppose)
கருத்துகள் (Comments)
இரு விடயங்கள் தெளிவில்லாமல் உள்ளன:
- ஏன் வாக்கெடுப்பு? தமிழ் இணையக் கல்விக்கழகம் விரும்பிய பணியாளரை நியமிக்கலாம் அல்லவா?
- வேறு யாருக்கும் இவ்வாய்ப்பு கொடுக்கப்படவில்லையா?
--AntanO 14:50, 29 நவம்பர் 2015 (UTC)
Antan, உறைவிட விக்கிமீடியர் தொடர்பான நல்கை வேண்டலுக்கான ஓர் எடுத்துக்காட்டை இங்கு காணலாம். நாம் இவ்வாறான நல்கை வேண்டலுக்குச் செல்லும் போது, உறைவிட விக்கிமீடியருக்கான விக்கிச்சமூக ஆதரவை முறைப்படி தெரிவிப்பதற்கு இந்த வாக்கெடுப்பு உதவும். இவ்வாக்கெடுப்பின் அடுத்த கட்டமாக விரிவான நல்கை வேண்டல் எழுதி அதற்கும் சமூக ஒப்புதல் பெற்ற பிறகே முன்னகர முடியும்.
இது ஒரே ஒருவருக்கான வாய்ப்பு மட்டும் அன்று. முதலில் ஒருவர் செயற்பட்டு அதிலுள்ள வாய்ப்புகள், இடர்கள், விளைவுகளை ஆய்ந்து இன்னும் பலர் அடுத்தடுத்து ஈடுபட முடியும். செகதீசுவரனிடம் இப்பணியில் ஈடுபட விருப்பமா என்று ஏற்கனவே கேட்டுள்ளேன். தனிப்பட்ட காரணங்களால் அவரால் இயலவில்லை. வேறு யாருக்கும் ஆர்வம் இருக்கிறது என்றால் மற்ற வழமையான அணுக்கங்களுக்கு விண்ணப்பிப்பது போல் இங்கேயே விண்ணப்பிக்கலாம். அது வேறு எந்த நிறுவனத்திலும் நாட்டிலும் உள்ள வாய்ப்பாகக் கூட இருக்கலாம்.
தமிழ் இணையக் கல்விக்கழகத்துடனான நமது கூட்டு முயற்சி என்பது அவர்களைப் புரவலர்களாக எதிர்நோக்கியது அன்று.
- நமது கட்டற்ற ஆக்கக் கொள்கை முனைவுகளுக்கான அரசு ஆதரவு
- நமது நிகழ்வுகள், செயற்பாடுகளுக்கு அவர்களது வளாக வசதிகளையும் அலுவல் முறைத் தொடர்புகளையும் பகிர்வது
போன்றவை இந்தக் கூட்டு முயற்சியில் அடங்கும். தமிழ் இணையக் கல்விக்கழகம் விக்கிப்பீடியா வளர்ச்சிப் பணிகளுக்காகப் பல்வேறு வகையிலும் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது என்றாலும், தகுந்த நிதி ஆதாரங்களும் உறைவிட விக்கிமீடியர்கள் போன்ற திட்டங்களும் கொண்டுள்ள இயக்கமாகிய நாம், நமது சார்பாக ஒருவரை இப்பொறுப்பில் அமர்த்துவது விக்கிப்பீடியா வழமைகளைக் காப்பதுடன்நமது பணிகளுக்கு முன்னுரிமை அளித்து குறுகிய காலத்தில் செயற்றிட்டங்களை முடிக்க உதவும். நன்றி.--இரவி (பேச்சு) 06:38, 30 நவம்பர் 2015 (UTC)
- பதிலுக்கு நன்றி இரவி. --AntanO 06:45, 30 நவம்பர் 2015 (UTC)
/ அன்பு நண்பர் தகவல் அவர்களுக்கு வணக்கம். தாங்கள் எமது கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு தமிழ் விக்சனரி பற்றி பேசியதை இனி செயலில் காட்டுங்கள். தங்கள் பின் நாங்கள் உதவிக்கு வருகின்றோம். பாராட்டுக்கள். உங்கள் பணி தமிழ் விக்கிப்பீடியாவிற்குப் பலவழிகளில் பயன்படட்டும்.
முடிவு (Result)
வாக்கெடுப்பு நிறைவுற்றது. ஒருமித்த ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி (Voting has concluded. Thanks for the unanimous support) --இரவி (பேச்சு) 07:06, 7 திசம்பர் 2015 (UTC)
இற்றை
2000+ நாட்டுடைமையான நூல்களுக்கான பொதுக்கள உரிமம் பெற்றதைத் தொடர்ந்து இவற்றைத் தானியக்கமாக விக்கிமூலத்தில் ஏற்றும் பணியைத் த. உழவன் கவனித்து வருகிறார். கடந்த 18 நாட்களில் மட்டும் 35,000+ பக்கங்களுக்கு மேல் பதிவேற்றியுள்ளோம். இதற்கென சிறப்பான ஒரு கருவியை சீனி உருவாக்கித் தந்துள்ளார். இது அனைத்து இந்திய மொழி விக்கிமூல ஆர்வலர்களுக்கும் பயன்பட்டு வருவது சிறப்பு. --இரவி (பேச்சு) 19:57, 11 பெப்ரவரி 2016 (UTC)
- வாழ்த்துகள்.--Kanags20:04, 11 பெப்ரவரி 2016 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 08:24, 12 பெப்ரவரி 2016 (UTC)
- விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:20, 12 பெப்ரவரி 2016 (UTC)
- விருப்பம்! த.உ/சீனி/ரவி ஆகியோருக்குப் பாராட்டுக்கள்.வியக்கத்தக்க முன்னேற்றம். TamilBot பற்றியும் https://github.com/tshrinivasan/OCR4wikisource இங்கு ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
- தமிழ் தானியங்கியானது அனைவருக்குமானது. அதனால் தான் வழமை போல, ஒரு பயனர் பெயருடைய தானியங்கியாக நான் அமைக்கவில்லை. அதுகுறித்து விக்கிமூலத்தில் அறியலாம். உலகெங்கும் உள்ள தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் பணி முன்நிற்பதால், அதில் கவனமாக இருக்கிறோம். நிறைய நிரலாக்கப் பணிகள். இந்திய அளவில் பலரும் நம் முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். எனவே, பின்னொரு நாளில் ஆவணப்படுத்தலாமென்றே எண்ணுகிறேன். ஊக்கமளித்த உள்ளங்களுக்கு நன்றி.--த♥உழவன்05:10, 13 பெப்ரவரி 2016 (UTC)
த. உழவனின் உறைவிட விக்கிமீடியப் பொறுப்பு கடந்த மார்ச்சு 31, 2016 உடன் நிறைவுற்றது. எண்ணற்ற நடைமுறைச் சிக்கல்களுக்கும் இடையே இப்பொறுப்பைச் சிறப்பாக நிறைவேற்றிய த. உழவனுக்கு எனது நன்றியும் பாராட்டும் உரித்தாகுக. முறையான பொறுப்பு நிறைவுற்ற போதும், த. உழவன் தொடர்ந்து வழமை போல் பங்களித்து தமிழ் விக்கிமூலம் தளத்தில் நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைப் பதிவற்றும் பணியை ஒருங்கிணைத்துள்ளார். இதன் மூலம் 2000+ நாட்டுடைமை நூல்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. பக்கங்கள் எண்ணிக்கையில் தமிழ் விக்கிமூலம் ஆறாவது இடத்தை எட்டியுள்ளது. இம்முழுச் செயற்பாடு குறித்த சிற்றறிக்கை ஒன்றையும் த. உழவன் விரைவில் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 16:25, 16 ஏப்ரல் 2016 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 16:27, 16 ஏப்ரல் 2016 (UTC)
உறைவிட விக்கிமீடியர் பொறுப்புக்கு என்று மாதம் 30,000 இந்திய உரூபாயை விக்கிமீடியா இந்தியக் கிளை ஏற்பாடு செய்யும் என்ற புரிதலின் அடிப்படையிலேயே த. உழவன் இப்பணியை மேற்கொண்டார். ஆனால், எதிர்பாராத விதமாக விக்கிமீடியா இந்தியக் கிளை நிதிச் சிக்கலில் மாட்டியதால், உரிய நேரத்தில் முழு உதவித் தொகையையும் அளிக்க முடியாமல் போனது. தற்போது, விக்கிமீடியா இந்தியக் கிளையில் நிலைமை சீராகி வருவதால், எஞ்சிய உதவித் தொகையும் த. உழவனுக்குப் பெற்றுத் தர முடிந்துள்ளது. @Info-farmer: 6 மாதங்களுக்கான உதவித் தொகை 1,80,000 இந்திய உரூபாய் முழுமையையும் பெற்றுக் கொண்டமையை உறுதிப்படுத்துமாறு வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 11:32, 18 மார்ச் 2017 (UTC)
- ஆம். இரவி (@Ravidreams:) மேற்கூறிய படி குறிப்பிட்ட முழு உதவித்தொகையைப் பெற்றுக் கொண்டேன்.வீட்டில் வளர்க்கும் கண்ணாடித் தொட்டி மீனை, கடலில் கொண்ட விட்டால், அம்மீனுக்கு எத்தகையத் தாக்கங்கள், மகிழ்ச்சிகள்ஏற்படுமோ அதுபோல, உறைவிட விக்கிப்பீடியர் அனுபவங்கள் இருந்தன. பின்னொரு நாளில் அதனை பலருக்கும் பயன்படும்படி தெரிவிப்பேன்.எனினும், ...
- ஒரு சிற்றூரில் இருந்து மாநகருக்குச் சென்ற போது, கையில் பணமில்லை. ஏனெனில், ஏற்கனவே செய்த வேலையை விட்டு விட்டு வந்ததால், அவர்களும் கணக்கு முடிக்கவில்லை. அதனால் தொடருந்து நிலையத்தில் ஒரு மூலையில் படுத்து, பலவித எண்ணங்களுக்கு நடுவில், இரவு முழுவதும்பயணித்ததில் அயர்ந்து தூங்கி விட்டேன். அப்பொழுது ஒரு அழைப்பு. எனது நிலையறிந்து பதறிய, சிபி (@Commons sibi:) தனது அலுவலகத்தில் தங்க அனுமதி வாங்கி தந்தார். விக்கியென்றாலே ஒரு பாசம். பரிவு. உதவி. சுந்தர்(@Sundar:) விக்சனரிக்காக அற்புதமான நிரலை அமைத்தளித்தார். இதனால் அனைத்தும் இன்னல்களையும் மறந்தேன். இரவி தனது சொந்த பணத்தில் கொடுத்த உதவியையும் திருடு போய் விட்டது. அந்நேரத்தில் மூர்த்தி (@கி.மூர்த்தி:) செய்த உதவி மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்ச்சியாக அமைந்தன. வற்புறுத்தி நண்பகல் உணவை உண்ண வைத்து விடுவார். பிறகு, பெருவெள்ளம் ஏற்பட்ட போது, எனது மடிக்கணினி, உடைகள், கொஞ்சம் பணம், எனது பொறுப்பில் தரப்பட்ட நூல்கள் வெள்ளத்தி்ல் வீணாயின.சென்னை அலுவலகத்தில் வெள்ளத்தால் பாதிக்கும் மேலான செயற்பாடுகள்பாதிப்படைந்தன. எனினும், அவர்களின் விக்கியன்பு தொடர்ந்து பல உதவிகளை அளித்தது.
- இச்சூழலால், பெங்களூர் என்ற மற்றொரு மாநகருக்குப் பயணம். பெங்களூர் மற்றொரு பெருங்கடல், அங்கு இரவி செய்து கொடுத்த அடிப்படை வசதிகள் அளப்பரியது. குறிப்பாக மருத்துவரிடம் அழைத்துச் சென்று எனது உடலை சீர் செய்தது. புதியநிரலாக்கத்தேவைகளை சீனி (@Tshrinivasan:) அவ்வப்போது இலண்டனில் இருந்து அலைப்பேசி வழியே தொடர்பு கொண்டு வழங்கியபடி இருப்பார். செல்வன் என்ற மற்றொருவிக்கியில் செற்படா பெங்களூரில் வசிக்கும் இரவியன் அலுவலக நண்பர் நிரலாக்க அடிப்படைகளைக் கற்றுத்தந்து, தேவையான நிரலாக்க உதவிகளைச் செய்தளித்தார். ஒருவழியாக பணிகள் படுவேகமாக நடந்தேறின.மிகக்குறுகிய காலத்தில் பல நண்பர்களும், இணைய இணைப்பு வழியே,விக்கி மூலத்தில் பக்கங்களை உருவாக்கினோம். மூன்றே மாதத்தில் ஏறத்தாழ 5 இலகரம்(இலட்சம்) பக்கங்கள் என்ற சாதனை மலர்ந்தது. அக்காலத்தில் உடன் பங்களிப்பு செய்த வங்கமொழியினருக்கும் பயன்படும்படி சீனி பல நிரலாக்க நுட்பங்களை கட்டமைத்தார். அப்பொழுது இந்திய அளவில் நடந்த இணையவழி . மேம்பாடுகளை,இரவி அற்புதமாக கையாண்டார்.
- இந்நேரத்தில்களப்பணியையும், பிற விக்கி செயற்பாடுகளையும் நேரில் காண, அமெரிக்காவில் இருந்து விக்கிமீடிய அறக்கட்டளையர் வந்து அகமகிழ்ந்தனர். அவர்கள் சென்னைக்கும் சென்றனர். இம்மகிழ்ச்சியான சூழலில், திடிரென்று எனக்கு பல அலைப்பேசி அழைப்புகள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இரவி இந்திய விக்கிமீடியாவில்(WMIN) இருந்து பணிவிலகினார். பெங்களூர் அலுவலகத்தில் இரவியுடன் இருந்தமையால், எனக்கு அலைப்பேசி அழைப்புகள். வழமை போல, இரவி சிரித்துக் கொண்டே, என்னுடைய இடர்கள், யாருக்கும் மன இடர்களை உருவாக்க விரும்பவில்லை. தமிழுக்காக தொடர்ந்து இணைந்து செயற்படுவோம் என்று பொருள்பட கூறி, அடுத்த பணிகளுக்குள் மூழ்கினார். அவரது சூழல் தான் என்ன? என்பதை அறிய, பிறரைப்போல எனக்கும் ஆவல். இந்திய விக்கிமீடியத்தில் இருந்த அவருக்கு, இன்னும் ஊதியம் வரவேண்டும் என்றே அனுமானிக்கிறேன்.
- தற்போதைய இரவியின் பணியால் எனக்குள் சற்று நிம்மதி. இத்தகைய சூழல்களை உருவாக்கிய உறைவிட விக்கிப்பீடியர் பணி உயரியது. அதனால் இன்றளவும் தொடரும் தமிழக அரசு அதிகாரிகள் சிலரின் நட்பு உயர்வானது.மிக்க நன்றி பரிதி.((@Thamizhpparithi Maari:)) இந்திய அளவில், முதன்முதலில் அரசு சார்பாக ஏற்பட்ட இந்த கூட்டுச்சாதனைத் தொடரும். விரைவில் தமிழ்நாடு பாடநூல் கழகம் தனது படைப்புகளை,முழுமையான பட, பனுவல் பொதுகளஉரிமைகளோடு அளிக்க உள்ளது.
- தமிழ்நாட்டு பாடநூல், கல்விப்பணி நிறுவனம் விரைவில் தங்கள் நிறுவன வெளியீடுகளை படைப்பாக்க பொதும உரிமையின் வெளியிட உள்ளனர். இதற்கான முதற்காட்ட கலந்துரையாடல் நிகழ்ந்துள்ளது. பல்துறை சார்ந்த கருவி நூல்களை உருவாக்கிடவும், முந்தைய வெளியீடுகளை திருத்திடவும், மறுபதிப்பாக்கவும் அணியமாக உள்ளனர்.--Thamizhpparithi Maari (பேச்சு) 08:27, 21 மார்ச் 2017 (UTC)
வணக்கம்--த♥உழவன்03:01, 19 மார்ச் 2017 (UTC)
- மகிழ்ச்சி! இந்த சிறப்பான திட்டத்தை செயற்படுத்திய அனை�வருக்கும் நன்றி. -- சுந்தர்10:53, 19 மார்ச் 2017 (UTC)
- விக்கிமூலங்களனைத்துக்குமான முகப்பில் தமிழை இன்னும் 1000+ வரிசையிலேயே வைத்திருக்கிறார்கள். இற்றைப்படுத்தக் கேட்டிருக்கிறேன். -- சுந்தர்14:38, 19 மார்ச் 2017 (UTC)
- மகிழ்ச்சி! இந்த சிறப்பான திட்டத்தை செயற்படுத்திய அனை�வருக்கும் நன்றி. -- சுந்தர்10:53, 19 மார்ச் 2017 (UTC)
- @Info-farmer:மிக்க மகிழ்ச்சி! தங்கள் பணிகளை பார்க்கும் போது மெய்சிலிக்கின்றது. தமிழ் விக்கிமீடியத் திட்டம் ஒன்று முதற்தர விக்கிகளுள் இணைந்துகொள்வதற்கு வழிவகை செய்த தகவலுழவன் ஐயாவிற்கு பாரட்டுகள். தொடருக தங்கள் விக்கிப்பணி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:19, 19 மார்ச் 2017 (UTC)
- பாராட்டுகள் த♥உழவன், தங்கள் பணி சிறப்புமிக்கது; மேன்மேலும் சிறப்புற்று இடையூறு இன்றி வளரட்டும்!--☤சி.செந்தி☤16:40, 19 மார்ச் 2017 (UTC)