peoplepill id: prafulla-samantara
PS
India
1 views today
1 views this week
Prafulla Samantara
Indian social worker

Prafulla Samantara

The basics

Quick Facts

Intro
Indian social worker
A.K.A.
ପ୍ରଫୁଲ୍ଲ ସାମନ୍ତରାୟ
From
Gender
Male
Birth
12 May 1951, Ganjam district
Age
72 years
The details (from wikipedia)

Biography

பிரஃபுல்ல சமந்தரா (Prafulla Samantara) என்பவர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராவார். இவரது பணிகளை பாராட்டி 2017 ஆண்டுக்கான பசுமை நோபல் பரிசு என்று பாராட்டப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டுள்ளது.

சட்டப்போராட்டம்

ஒடிசா மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் பல்லுயிர் வளம் நிறைந்த நியமகிரி மலை உள்ளது. இந்த மலைச்சிகரங்களில் இருந்து உருவாகும் நூற்றுக்கும் மேற்பட்ட ஓடைகள் பல்லாயிரக்கணக்கான மக்களின் நீராதராமாக விளங்குகின்றன. இந்த மலைப்பகுதியில் எட்டாயிரம் மக்கள்தொகை உடைய டோங்க்ரியா கோந்த் எனும் பழங்குடிகள் வாழ்கின்றனர். இந்நிலையில் 2000களின் துவக்கத்தில் பன்னாட்டு நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ், இந்த மலைப்பகுதியில் பாக்சைட் எடுப்பதற்கு அரசிடம் அனுமதி பெற்றது. இது, நியமகிரி மலையைச் சீர்குலைக்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்குத் தொடக்கப் புள்ளியாக அமைந்தது, 1,660 ஏக்கர் வளமான மலைப்பகுதி அழிவை எதிர்நோக்கியது.

இந்த சிக்கல் குறித்து பிரஃபுல்லா சமந்தராவுக்கு தெரியவந்தது. இதனால் ஏற்படும் விளைவுகளை அறிந்து பழங்குடி மக்களின் வாழ்வாதாரம்மையும், நியமகிரி மலையையும் பாதுகாக்க வேண்டுமென முடிவெடுத்து, பழங்குடிகளுக்கு அவர்களது பாரம்பரிய நிலங்கள் பறிக்கப்படும் ஆபத்து குறித்து எச்சரித்தார். மக்களுடன் இணைந்து பரப்புரை, சிறு கூட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றால் சுரங்க வேலைகள் தொடராமல் இருக்கப் போராடினார். மற்றொருபுறம் வேதாந்தா பாக்சைட் சுரங்கத்தைத் தடைசெய்யும் மனுவை உச்ச நீதிமன்றத்தில் முதல் ஆளாகத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் பத்தாண்டுகளுக்குப் பிறகு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்தது, அதன்படி வேதாந்தா சுரங்கம் அமைப்பது தொடர்பாக ஆதரவு, எதிர்ப்பு போன்றவற்றை தெரிவிக்க உள்ளூர் சமூகங்கள் வாக்களிக்க வேண்டும் என உத்தரவிட்டது. 2013 ஆகஸ்ட் மாதம் 12 பழங்குடி பஞ்சாயத்துகளும் சுரங்கத்துக்கு எதிராக வாக்களித்தன. இதைத் தொடர்ந்து பகுதியளவு செயல்பாடுகளை நிறுத்திய வேதாந்தா நிறுவனம், 2015 ஆகஸ்ட்டில் அலுமினியச் சுத்திகரிப்பு நிலையத்தை முற்றிலும் மூட முடிவெடுத்தது. டோங்க்ரியா கோந்த் பழங்குடியினர் நியமகிரி மலையைப் பாதுகாப்பதை 2016-ம் ஆண்டில் உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம், ஒடிசா சுரங்க நிறுவனம், வேதாந்தா மனுக்களை நிராகரித்தது.

விருது

இதற்காக 12 வருடம் சட்டப் போராட்டம் நடத்திய பிரஃபுல்ல சமந்தராவுக்கு கோல்டுமேன் சூழலியல் விருது வழங்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

The contents of this page are sourced from Wikipedia article. The contents are available under the CC BY-SA 4.0 license.
Lists
Prafulla Samantara is in following lists
comments so far.
Comments
From our partners
Sponsored
Prafulla Samantara
arrow-left arrow-right instagram whatsapp myspace quora soundcloud spotify tumblr vk website youtube pandora tunein iheart itunes