peoplepill id: s-navaraj-chellaiah
SNC
India
1 views today
1 views this week
S. Navaraj Chellaiah
Writer

S. Navaraj Chellaiah

The basics

Quick Facts

Intro
Writer
A.K.A.
Dr. S. Navaraj Chellaiah Navaraj Chellaiah
Places
Work field
Gender
Male
Birth
Death
Age
64 years
The details (from wikipedia)

Biography

எசு. நவராசு செல்லையா (பிறப்பு 1937 - இறப்பு 2001) ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

விளையாட்டு, உடல் நலம், உடற்பயிற்சி, உடற்கல்வி, யோகாசனம், மனநலம் குறித்த ஆய்வு நூல்களை இவர் எழுதியுள்ளார். முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர். விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். விளையாட்டு இசைப்பாடல்கள் என்னும் ஒலிநாடாவை 1978-ம் ஆண்டு வெளியிட்டார். விளையாட்டுக்களின் பெருமையை உணர்த்தும் வகையில் “ஒட்டப் பந்தயம்” எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இதன் கதை, வசனம், பாடல்கள், இசை, பின்னணிக்குரல், நடிப்பு தயாரிப்பு முதலிய பொறுப்புகளையும் ஏற்று திரையிட்டார். உடற்கல்வித் துறையில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு தமிழ்நாடு அளவிலே “உடற்கல்வி கலைமாமணி” என்ற விருதையும், ஒவ்வொரு பள்ளியிலும் சிறந்து விளங்கும் உடற்கல்வி ஆசிரியப் பெருமக்களுக்கு “உடற்கல்வி ஜீவ ஜோதி” என்ற விருதையும் வழங்கிப் பாராட்டி வந்தார். ஒலிம்பிக் பந்தயத்தின் கதை, விளையாட்டுக்களின் வரலாறும் வழிமுறைகளும், விளையாட்டுக்களின் கதைகள் முதலிய நூல்களுக்காக 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார். தமிழ் நாட்டுச் சடுகுடுப் பாடல்களும் சடுகுடு ஆட்டமும் என்னும் நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்துள்ளது. சென்னையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. கல்லூரியில் பேராசிரியராகவும், ஆய்வுத் துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். உலகப் பொதுமறை திருக்குறளுக்கு புதிய சிந்தனைகளுடன் (அறத்துப்பால் மட்டும்) திருக்குறள் புதிய உரை என்ற நூலையும் எழுதியுள்ளார்.

எஸ்.நவராஜ் செல்லையா யாத்த நூல்கள்[3]

  1. தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்
  2. சதுரங்கம் விளையாடுவது எப்படி
  3. சடுகுடு ஆட்டம்
  4. அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்
  5. இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்
  6. இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்
  7. உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்
  8. ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்
  9. கடவுள் கைவிடமாட்டார்
  10. கால்பந்தாட்டம்
  11. கிரிக்கெட் ஆட்டத்தின் கதை
  12. கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்
  13. கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்
  14. கோகோ ஆட்டம்
  15. சிந்தனைச் சுற்றுலா
  16. தேகத்தைத் தெரிந்து கொள்வோம்
  17. நமக்கு நாமே உதவி
  18. நல்ல கதைகள்
  19. நீங்களம் உடலழகு பெறலாம்
  20. நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்
  21. புதுப்புது சிந்தனைகள்
  22. மென் பந்தாட்டம்
  23. வள்ளுவர் வணங்கிய கடவுள்
  24. வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்
  25. விளையாட்டு ஆத்திசூடி
  26. விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்
  27. விளையாட்டு உலகில் வீரக் கதைகள்
  28. விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி
  29. G.K. in Sports & Games
  30. PHYSICAL FITNESS and HEALTH

சான்றாவணங்கள்

The contents of this page are sourced from Wikipedia article. The contents are available under the CC BY-SA 4.0 license.
Lists
S. Navaraj Chellaiah is in following lists
comments so far.
Comments
From our partners
Sponsored
Credits
References and sources
S. Navaraj Chellaiah
arrow-left arrow-right instagram whatsapp myspace quora soundcloud spotify tumblr vk website youtube pandora tunein iheart itunes