Ritika Verma
Quick Facts
Biography
ரித்திகா வர்மா (பிறப்பு 4 நவம்பர் 1998) பஞ்சாபைச் சேர்ந்த ஒரு இந்திய சமூக சேவகர் மற்றும் தேசிய சேவைத் திட்ட தன்னார்வலர் ஆவார், சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கல்லுரிப் படிப்பை மேற்கொண்டபோது,நாட்டு நலப்பணி இயக்கத்தின் மூலம் மாதவிடாய் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளார். மேலும் மாணவர்கள் குழுக்களாக இணைந்து, சுகாதார மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை மற்றும் நீர் பாதுகாப்பு போன்றவைகளிலும், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் தூய்மை இயக்கம்-இந்தியா போன்ற இந்திய அரசின் திட்டங்களிலும் பங்குகொண்டுள்ளார்.
கிராமங்களை தத்தெடுத்து, அங்குள்ள மக்களுக்கு பாலின உணர்வு, எழுத்தறிவு பிரச்சாரம், சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் போன்றவைகளின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இவரது செயல்பாடுகள் பாராட்டுக்குரியவைகளாகும்.
அவரது இத்தகைய நலப்பணி திட்ட செயல்களை ஊக்குவிக்கும் பொருட்டு, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை மாநில அளவில் ஸ்வச் பாரத் கோடைகால பயிற்சி விருது, என்ற மதிப்புமிக்க தேசிய விருதைப் பெற்றுள்ளார். அத்தோடு 2017-18 ஆம் ஆண்டில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின், தேசிய நலப்பணி சேவைக்கழகம் அவரது முன்மாதிரியான மற்றும் பாராட்டத்தக்க சமூக சேவையைப் பாராட்டி சிறந்த தன்னார்வலர் என்ற விருதையும் வழங்கியுள்ளது.அதற்கெல்லாம் மணிமகுடமாக, 24 செப்டம்பர் 2021 அன்று மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் ஸ்ரீ ராம்நாத் கோவிந்தால் 2019-20க்கான தேசிய சேவைத் திட்ட விருதினையும் பெற்றுள்ளார்.[2இந்திய அரசு வழங்கும் தன்னார்வத் தொண்டருக்கான தேசிய சேவைத் திட்டத்தின் உயரிய விருதுகளில் ஒன்றாக இவ்விருது கருதப்படுகிறது.இந்தியாவில் என்எஸ்எஸ் இன் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக சிறந்த என்எஸ்எஸ் தன்னார்வலர்களுக்கு இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் தேசிய சேவை திட்ட விருதுகள் வழங்கப்படுகின்றன.COVID-19 தொற்றுநோய்களின் போது சமூக உணர்வூட்டலுக்கான தனது சேவைகளுக்காக பஞ்சாப் முழுவதுமே நன்கு அறியப்பட்டவரானரித்திகா பஞ்சாப் பல்கலைக்கழகம் சண்டிகர் இந்தியாவின் முன்னாள் மாணவி மற்றும் எம்.எஸ்சி மானுடவியல் படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
மேலும் பார்க்கவும்
- தேசிய சேவை திட்டம்
- பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்