peoplepill id: p-s-gnanam
Indian actress
P. S. Gnanam
The basics
Quick Facts
Intro
Indian actress
Places
is
Work field
Gender
Female
The details (from wikipedia)
Biography
பி. எஸ். ஞானம் (P. S. Gnanam, இறப்பு: மே 1962, அகவை 41) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவர். இல்லறமே நல்லறம், சபாஷ் மீனா, யார் பையன், வள்ளியின் செல்வன், பாசமலர் உட்பட ஐம்பதிற்கும் அதிகமான படங்களில் நடித்தவர்.
பொள்ளாச்சி எஸ். ஞானம் என்ற இயற்பெயரைக் கொண்ட பி. எஸ். ஞானம் 1937 ஆம் ஆண்டில் வெளிவந்த மைனர் ராஜாமணி என்ற படத்தில் முதன் முதலில் நடித்தார். முதல் படத்திலேயே சிறப்பாக நடித்துப் பாராட்டுப் பெற்றார். பாசமலர் திரைப்படத்தில் கதாநாயகி சாவித்திரியை கொடுமைப்படுத்தும் வில்லி வேடத்தில் நடித்தார்.
நடித்த திரைப்படங்கள்
- மைனர் ராஜாமணி (1937)
- தாயுமானவர் (1938)
- பிரகலாதா (1939)
- மாணிக்கவாசகர் (1939)
- சந்தனத்தேவன் (1939)
- நவீன விக்ரமாதித்தன் (1940)
- காளமேகம் (1940)
- சதி முரளி (1940)
- தயாளன் (1941)
- கிருஷ்ணகுமார் (1941)
- கிருஷ்ணபிடாரன் (1942)
- பிருத்விராஜன் (1942)
- திவான்பகதூர் (1943)
- ஸ்ரீ ஆண்டாள் (1948)
- மாரியம்மன் (1948)
- பிழைக்கும் வழி (1948)
- கல்யாணி (1952)
- பொன்னி (1953)
- மலைக்கள்ளன் (1954)
- மாங்கல்யம் (1954)
- கதாநாயகி (1955)
- நீதிபதி (1955)
- கோமதியின் காதலன் (1955)
- வள்ளியின் செல்வன் (1955)
- முல்லைவனம் (1955)
- கோமதியின் காதலன் (1955)
- பெண்ணின் பெருமை (1956)
- ரங்கூன் ராதா (1956)
- யார் பையன் (1957)
- இல்லறமே நல்லறம் (1958)
- சபாஷ் மீனா (1958)
- மரகதம் (1959)
- தலை கொடுத்தான் தம்பி (1959)
- கவலை இல்லாத மனிதன் (1960)
- சங்கிலித்தேவன் (1960)
- கானல் நீர் (1961)
- பாசமலர் (1961)
- கொஞ்சும் சலங்கை (1962)
- எதையும் தாங்கும் இதயம் (1962)
மறைவு
பி. எஸ். ஞானம் வாகனம் ஒன்றில் செல்லும் போது திருத்தங்கல் என்னும் ஊரில் விபத்துக்குள்ளானதில் தலை நசுங்கி மரணமானார். இறக்கும் போது அவருக்கு வயது 41.
மேற்கோள்கள்
The contents of this page are sourced from Wikipedia article.
The contents are available under the CC BY-SA 4.0 license.
Lists
P. S. Gnanam is in following lists
By field of work
By work and/or country
comments so far.
Comments
Credits
References and sources
P. S. Gnanam