Nayomini Weerasooriya
Quick Facts
Biography
நயோமினி ரத்நாயக்க வீரசூரிய (Nayomini Weerasooriya) இலங்கையை சேர்ந்த ஒரு தொழில்முனைவோர்ஆவார். பத்திரிகையாளர், எழுத்தாளர் என்று பன்முகங்களில் இவர் இயங்குகிறார்.. 1965 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் தேதியன்று பிறந்தார்.
1980 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் தனி செய்தித்தாள்களில் ஒரு பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1984 முதல் 1986 ஆம் ஆண்டு வரை செருமனியிலுள்ள பான் நகரில் உள்ள இண்டர் பிரசு சர்வீசு என்ற உலகாய செய்தி முகமையிலும் பத்திரிகையாளராகப் பணியாற்றினார்.
பத்திரிகையில் கிடைத்த வெற்றிகரமான வாழ்க்கையைத் தொடர்ந்து வீரசூரிய மக்கள் தொடர்புக்கு சென்றார். இலங்கையின் பல முன்னணி நிறுவனங்களுடன் பணிபுரிந்தார். 1995 ஆம் ஆண்டில் தனது சொந்த பத்திரிகை நிறுவனத்தை நிறுவினார். இலங்கையின் முதல் பத்திரிகை நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். இந்நிறுவனத்தினர் முன்னணி உள்ளூர் மற்றும் உலகளாவிய அடையாளம் பெற்ற நிறுவனங்களுடன் பணிபுரிந்துள்ளனர் மற்றும் தொடர்ந்து பணிபுரிகின்றனர்..
1998 ஆம் ஆண்டில் நயோமினி இலங்கையின் முன்னணி பெண்கள் இதழ்களில் ஒன்றான சத்யன் என்ற மாதாந்திர பெண்கள் வாழ்க்கை முறை இதழை நிறுவினார்..
நூல் பட்டியல்
ஆண்டு | நூல் | வெளியீட்டாளர் |
---|---|---|
2003 | தேசமான்ய டாக்டர். லலித் கொத்தலாவல : வாழ்க்கை வரலாறு |