Durai Rajaram
Quick Facts
Biography
துரை இராஜாராம் (பிறப்பு: அக்டோபர் 31, 1933) பி. ஏ. துரைசாமிப்பிள்ளையின் மகனாக பிறந்தவர். மயிலம் தமிழ்க்கல்லூரியில் வித்துவான் தேர்வில் முதல் வகுப்பில் வெற்றி பெற்றார். காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் 32 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார். பல வைணவ மாநாடுகளில் கலந்துகொண்ட இவர் 1994 ஆம் ஆண்டு பண்ருட்டி வைணவ மாநாட்டிற்கு இவர் தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.
இவர் இயற்றிய வ. உ. சிதம்பரனார், விண்ணுலகில் பாரதியார் என்னும் நாடகங்களை சென்னை வானொலி ஒலிபரப்பியுள்ளது. கம்பராமாயணம், பதினெண் கீழ்க்கணக்கு, ஸ்ரீவசன பூஷணம், கம்பனின் சிற்றிலக்கியங்கள், சேக்கிழார் பிள்ளைத்தமிழ், மூவருலா, மஸ்தான் சாகிபு பாடல்கள் மற்றும் பல நூல்களுக்கு தெளிவுரை எழுதியுள்ளார்.
கலிஃபோர்னியாவில் உள்ள உலகக் கலை பண்பாட்டு இயக்கம் இவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.