Arimathi Thennagan
Quick Facts
Biography
அரிமதி தென்னகன் (Arimathi Thennagan, மார்ச் 12, 1934 – செப்டம்பர் 12, 2017) புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மூத்த தமிழ் புலவர்களில் ஒருவரும், எழுத்தாளரும் ஆவார். அவரது இயற்பெயர் நாமதேவன் ஆகும். இவர் தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக, மயிலம் மடம் தமிழ் வித்துவான் கல்லூரியில் முறையாக தமிழ் படித்து வித்துவான் பட்டம் பெற்று, திண்டிவனத்திலுள்ள குஷால் சந்த் பள்ளியில் தமிழ் ஆசிரியராக தனது வாழ்க்கையத் தொடங்கினார். 1960 இல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 34 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிவிட்டு தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றார். இவர் புதுச்சேரி அரசின் முதல் தமிழ்மாமணி விருது பெற்றார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்களுடன் இலக்கிய தொடர்பில் இருந்தவர். 200க்கும் மேற்பட்ட நூல்களை படைத்துள்ள அரிமதி தென்னகன், சிறந்த குழந்தைகள் இலக்கிய படைப்பிற்காக மத்திய அரசின் நேரு இலக்கிய விருதைப் பெற்றார். இவர் செப்டம்பர் 12, 2017 அன்று, தம்முடைய 84 ஆம் அகவையில் புதுச்சேரியில் காலமானார்.
பெற்ற விருதுகள்
- சிறந்த குழந்தைகள் இலக்கிய படைப்பிற்காக, மத்திய அரசின் நேரு இலக்கிய விருது.
- தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் விருது.
- புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறையின் சிறந்த தமிழறிஞருக்கான முதல் தமிழ்மாமணி விருது.
- புதுச்சேரி அரசின் கம்பன் புகழ் இலக்கிய விருது மற்றும் நேரு இலக்கிய விருது போன்ற பல விருதுகளைப் பெற்றார்.
மேற்கோள்கள்
- ↑ "அரிமதி தென்னகன் காலமானார்".தினமணி. பார்த்த நாள் 23 December 2018.
- ↑ "புதுவை எழுத்தாளர் அரிமதி தென்னகன்".தினமலர்.