Biography
Lists
Also Viewed
Quick Facts
Intro | Sri Lankan social media strategist | |
Places | Sri Lanka | |
is | Businessperson | |
Work field | Business | |
Gender |
| |
Birth | 4 November 1995 | |
Age | 29 years | |
Star sign | Scorpio |
Biography
இரத்நாயக்க முதியன்சேலாகே திலங்க இரத்நாயக்க (Rathnayake Mudiyanselage Thilanka Madushan Rathnayake) திலங்க ரத்நாயக்க என்று பிரபலமாக அறியப்படுகிறார். இலங்கையில் ஓர் இசைக்கலைஞராகவும் சமூக ஊடக செயற்பாட்டாளராகவும் இயங்கி வருகிறார். சமூக ஊடக நிறுவனமான தெவோசன் சமூக ஊடக முகமையை இவர் நிறுவினார்.
தனிப்பட்ட வாழ்க்கை
இரத்நாயக்க 1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று இலங்கையின் கண்டியில் பிறந்தார். கண்டி திரித்துவக் கல்லூரி மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவராவார். காந்தி பிரியந்தி இரத்நாயக்க மற்றும் பியதிலக ரத்நாயக்க ஆகியோர் இவருடைய பெற்றொர்களாவர். இரத்தநாயக்கவிற்கு தில்சனி, கயானி, திலினி மற்றும் இசானி என நான்கு சகோதரிகள் உள்ளனர். பிளைமவுத் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் இரத்நாயக்க பட்டம் பெற்றார்.
தொழில்
இரத்நாயக்க தனது உயர் கல்வியை விருந்தோம்பல் துறையில் முடித்தார், பின்னர் சந்தைப்படுத்தல் மற்றும் புகைப்படக்கலைக்குச் சென்றார். தற்போது பக்தி சமூக ஊடக முகமையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக பணியாற்றுகிறார், அங்கு இவர் சமூக ஊடக ஆலோசகராகவும் அரசியல் ஆய்வாளராகவும் பணியாற்றுகிறார். 2015 ஆம் ஆண்டில் கயான் பெரேராவின் 'டாடி' இசைக்குழுவுடன் இசை வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் பிரபல நடிகை யுரேனி நோசிகாவுடன் இணைந்தார். இதற்கிடையில், இசையமைப்பாளர் இலகிரு பெரேராவின் சமூக ஊடக தள ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். அவர்களைத் தவிர, இரத்நாயக்க பல இலங்கை பன்னாட்டு துடுப்பாட்ட வீரர்களின் சமூக ஊடக தள ஒருங்கிணைப்புடன் ஒத்துழைத்தார், அத்துடன் தலதா மாளிகை, அரசியல்வாதிகள், உணவு விடுதிகள் , பிரபலங்கள் மற்றும் வணிகங்களுக்கான சமூக ஊடக தளங்களை நிர்வகித்தார்.
2022 ஆம் ஆண்டில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கும் இலங்கையால் முடியும் என்ற பொருள்கொண்ட ஓர் அமைப்பை இவர் தொடங்கினார். இதே ஆண்டில் பிராண திரைப்படத்துடன் இணைந்து ஒத்துழைத்தார். இது இலங்கையில் அதே காலகட்டத்தில் சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியான முதல் திரைப்படமாகும்.
மேற்கோள்கள்
- ↑ "THILANKA RATNAYAKE ALREADY A GIANT IN UNTANGLING SOCIAL MEDIA,ENGRAVING OUT PROFESSIONS" (in en-US). 2022-09-12. https://www.info-rain.com/thilanka-ratnayake-already-a-giant-in-untangling-social-mediaengraving-out-professions/.
- ↑ Today, Ceylon (2022-09-02). "Optimising Social Media to the Hilt" (in en-US). https://ceylontoday.lk/2022/09/03/optimising-social-media-to-the-hilt/.
- ↑ "It’s not a one person job - INSIGHT" (in English). https://www.dailymirror.lk/insight/Its-not-a-one-person-job/374-244606.
- ↑ admin, eLanka (2022-09-13). "Thilanka Rathnayake already a giant in untangling social media, engraving out professions - by Sunil Thenabadu" (in en-US). https://www.elanka.com.au/thilanka-rathnayake-already-a-giant-in-untangling-social-media-engraving-out-professions-by-sunil-thenabadu/.
- ↑ ""චිරාත් වැජඹෙනු ඇත් රජ උත්තම"" (in en-gb). https://am.lk/features/item/68579-nadungamuwa-raja.
- ↑ Anthony, Venessa (2022-08-22). "Social media manager Thilanka Rathnayake on getting that coveted blue tick" (in en-US). http://brunch.lk/social-media-manager-thilanka-rathnayake-on-getting-that-coveted-blue-tick/.
- ↑ Anthony, Venessa (2022-09-06). "Project #SriLankaCan calls all tourists back to SL" (in en-US). http://brunch.lk/project-srilankacan-calls-all-tourists-back-to-sl/.
- ↑ ""Prana" is based on a tragic true story." 2022-07-22 அன்று. பரணிடப்பட்டது.. . https://www.sarasaviya.lk/films-local/2022/07/21/23566/ඛේදනීය-සත්%E2%80%8Dය-සිදුවීමක්-පාදක-වූ-”-ප%E2%80%8D්%E2%80%8Dරාණ-”.
- ↑ "A life for Sri Lankan cinema..! Watch the trailer" 2022-09-21 அன்று. பரணிடப்பட்டது.. . https://cinema.lk/ලාංකීය-සිනමාවට-ප්%E2%80%8Dරාණයක්/.