Theni. M. Subramani

Indian writer
The basics

Quick Facts

IntroIndian writer
PlacesIndia
isWriter
Work fieldLiterature
Gender
Male
Birth23 February 1968
Age56 years
The details

Biography


தேனி. மு. சுப்பிரமணி (பிறப்பு: பிப்ரவரி 23, 1968, தூத்துக்குடி) ஒரு தமிழக எழுத்தாளர் மற்றும் விக்கிப்பீடியர். தேனி அருகிலுள்ள பழனிசெட்டிபட்டி எனும் ஊரில் வசிக்கும் இவர் பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டமும், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்புத் துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், இதழியலில் முதுகலைப் பட்டயமும், தொழிலாளர் நலம் மற்றும் நிர்வாகச் சட்டத்தில் பட்டயமும் பெற்றிருக்கிறார். இவர் தமிழ் இலக்கிய ஆர்வத்தால் 1982 ஆம் ஆண்டு முதல் தமிழில் வெளியாகும் பல அச்சு இதழ்களிலும், இணைய இதழ்களிலும் தேனி எம்.சுப்பிரமணி, முத்துக்கமலம், தாமரைச்செல்வி எனும் பெயர்களில் துணுக்குகள் (குறுந்தகவல்கள்) மற்றும் நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவற்றை எழுதியிருக்கிறார். மேலும் இவருடைய படைப்புகளாக கட்டுரைகள், பேட்டிக்கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என்று அச்சிலும், இணையத்திலும் வெளியாகி உள்ளன. இவர் எழுதிய தமிழ் விக்கிப்பீடியா என்ற நூலுக்கு தமிழ்நாடு அரசின் 2010 ஆம் ஆண்டுக்கான கணினியியலில் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு கிடைத்தது.

இணைய இதழ்

  • கடந்த 01-06-2006 முதல் முத்துக்கமலம் எனும் பெயரில் தமிழில் இணைய இதழ் ஒன்றைத் தொடங்கி அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்று சிறப்புடன் நடத்தி வருகிறார்.

வெளியாகியுள்ள நூல்கள்

  • தமிழ் விக்கிப்பீடியா - மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் (நவம்பர் 2010)
  • தமிழ் இணையச் சிற்றிதழ்கள் - மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.(நவம்பர் - 2010)
  • சுவையான 100 இணையதளங்கள் - கௌதம் பதிப்பகம், சென்னை.(டிசம்பர் 2010)
  • மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் - கௌதம் பதிப்பகம், சென்னை.(ஆகஸ்ட் 2011)
  • மகளிருக்கான 100 இணையதளங்கள் - கௌதம் பதிப்பகம், சென்னை.(நவம்பர் 2011)
  • அதிசயங்கள்! உலக அதிசயங்கள்! - தரணிஷ் பப்ளிகேசன்ஸ், சென்னை. (சூலை 2012)

விருதுகள்

  • தமிழ்நாடு அரசு பொதுநூலகத் துறையின் சார்பில் தேனி மாவட்ட நூலகம் வழங்கிய 2009 ஆம் ஆண்டின் இணைய இதழியல் துறைக்கான “கலை இலக்கிய சாதனையாளர் விருது” (2009)
  • சி. பா. ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம் மற்றும் தமிழ்த்திணை இணைய இதழ் வழங்கிய 2010 ஆம் ஆண்டிற்கான “தமிழ்த்திணை விருது”
  • தேனி, தென்தேன் தமிழ்ச்சங்கம் வழங்கிய 2011 ஆம் ஆண்டிற்கான “கலை - இலக்கிய சாதனையாளர் விருது”
  • தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ‎வழங்கப்படும் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாசிரியருக்கான பரிசு. (2012)

    மேற்கோள்கள்

    The contents of this page are sourced from Wikipedia article. The contents are available under the CC BY-SA 4.0 license.