Sanjit Lucksman

The basics

Quick Facts

PlacesSri Lanka
Gender
Male
Birth30 March 1991, Batticaloa, Batticaloa District, Eastern Province, Sri Lanka
Age33 years
Star signAries
The details

Biography

சஞ்சித் லக்ஷ்மன் (Sanjit Lucksman, 30 மார்ச் 1991) இலங்கையில் இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். 2016 இல் இடம்பெற்ற தேசிய அரச இசை விருதுகள் நிகழ்வில் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினைப் பெற்றார்.

வாழ்க்கைச் சுருக்கம்

இவரது பிறப்பிடம் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு. இவரது தந்தையிடம் காணப்பட்ட இசை ஆர்வம் காரணமாக, 4 வயதிலேயே கர்நாடக சங்கீதம் கற்க ஆரம்பித்தார். ஆரம்ப சங்கீத பயிற்சியினை ஆசிரியர் சாந்தாதேவியிடம் கர்நாடக சங்கீதம் மூலம் கற்க ஆரம்பித்தார். கித்தார், கிளபம் (கின்னரப்பெட்டி) ஆகியவற்றை இசைக் கற்றுக்கொண்டதுடன், இசைத்தொழில்நுட்பம் மற்றும் ஒலிக்கலவை பொறியியல் கல்வி ஆகியவற்றை முறையே பயின்றார். உயர் கல்வியை புனித மிக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலையில் கற்றார்.

பாடசாலை நாட்களில் கல்லூரி விழாக்களில் பாடகராகவும், பின் பிக்மாட்ச் பாடல் (கிரிக்கெட் போட்டிக்கானது) ஒன்றை சொந்தமாக இசை அமைத்து தனது இசை வாழ்க்கையை ஆரம்பித்த சஞ்ஜித், மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய பாடலான "உயிரின் வாசம்" என்ற பாடலை இசையமைத்து பாராட்டைப் பெற்றார். மேலும், குறுந்திரைப்படங்களுக்கு பின்னணி இசை வழங்குவது, வானொலி குறியீடுபாடல், பக்திப்பாடல்களை இசையமைப்பது, ஆவணப்படம் தயாரிப்பது, ஏனைய கலைஞர்களுடன் ஒலி பொறியியலாளராக பணியாற்றுவது போன்ற பல இசைத்துறைகளில் பங்களிப்புச் செய்கிறார்.

இசைப்பயணம்

பாடல்களுக்கான இசையமைப்பாளராக

  • மட்டக்களப்பு மாவட்ட கீதம் ”உயிரின் வாசம்” பாடலின் இசையமைப்பாளர்.
  • மட்டக்களப்பு (BMA) வைத்திய சங்கத்தின் உத்தியோகபூர்வ கீதம் "மாட்சி நிறை சேவை” யின் இசையமைப்பாளர்.
  • "மீரா - உயிரே தெனம் உன்னைத்தான்", மரப்பாச்சி பொம்ம,. ஹைக்கு நிலவே, காற்றே என் வாசல்,. சொந்த ஊரே போன்ற பாடல்களுக்கான இசையமைப்பு.
  • “ மாமாங்க ஈஸ்வரரே “, “ பேசும் தெய்வம் பேச்சியம்மன் ”, “ எனக்காக ”,  “ மெர்ரி கிறிஸ்துமஸ் ”  இசைத்தொகுப்புகள் உட்பட 100க்கும் மேற்பட்ட சமய சார் மற்றும் பக்திப் பாடல்களை இசையமைத்துள்ளார்.

குறும்திரைப்படங்களுக்கான இசையமைப்பாளராக

  • தவமின்றி கிடைத்த வரமே 
  • முத்தமிழ்     
  • ஒரு கிண்ணியின் கதை     
  • தஸ்மானியாவின் வரலாறு 
  • "அன் பிரண்ட் "     
  • அப்பா   
  • இருண்ட  உலகம்
  • தி ரியல் பிரீடோம் - ( ரேடியோ மிர்ச்சி )
  • சிட்சை]
  • " மொபைலா " 
  • " மை வெட்டிங் டே " - ( தெலுங்கு )
  • " பாஸ் மார்க்ஸ் "                     

விருதுகளும் பட்டங்களும்

  • 2017 இல் கிழக்கு மாகாண தமிழ் இலக்ககிய விழா 2017க்கான " இசை துறைக்கு " இளம் கலைஞர் விருது.
  • 2016 இல் தேசிய அரச இசை விருதுகள் நிகழ்வில் "காற்றே என் வாசல்" பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசியவிருது.
  • 2015 இல் ருத்ரம் "மரபாட்சி பொம்மை" தனிப்பாடலுக்காக சிறந்த பாடலுக்கான விருது.
  • 2015 இல் "பாலுமகேந்திரா" விருது வழங்கும் நிகழ்வில் ஹைக்கு நிலவே காணொளி பாடலுக்காக சிறந்த பாடல் மற்றும் தயாரிப்பிற்கான விருது.
  • 2014 இல் அப்பா குறுந்திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான வேல்ஸ் விருது.

மேற்கோள்கள்

The contents of this page are sourced from Wikipedia article on 21 Nov 2024. The contents are available under the CC BY-SA 4.0 license.