Biography
Lists
Also Viewed
Quick Facts
Intro | Caste in India, Srilanka | |
is | Agriculturist | |
Work field | Science | |
Gender |
|
Biography
சைவ வெள்ளாளர் அல்லது சைவ வேளாளர் (Saiva Vēlālar) எனப்படுவோர், தமிழர்களின் குலத்தொழில் அடிப்படையில் வேளான்மையைக் குலத்தொழிலாக கொண்டதுடன் சைவ சமய நெறிகளை கடைப்பிடிப்பவர்களாகவும் இருப்பதனால் சைவ வேளாளர் என அறியப்படுகின்றனர். இவர்கள் தமிழ்நாடு, இலங்கை, மட்டுமல்லாமல் புலம்பெயர் நாடுகளிலும் வாழுகின்ற தமிழ் இனத்தின் ஒரு சமூக குழுவினர் ஆவர். இவர்களை வட தமிழகத்தில் சைவ முதலியார் என்றும் தென் தமிழகத்தில் சைவப் பிள்ளை என்றும் அழைப்பர்.
இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் சைவ உணவை பெரும்பான்மையாக உட்கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள். வேளாண்மை தொழில் மட்டுமின்றி கணக்காயர்களாகவும், சில அரசர்களிடம் அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர்.
வேறுபாடு
இவர்கள் வேளான்மை செய்வதை குலத்தொழிலாக கொண்டவர்கள் என்றாலும், சைவ சமய நெறிகளை கடைபிடிப்பதனால், அல்லது சைவ சமயத்திற்கு முதன்மை இடம் கொடுப்பவர்கள் என்பதனால், சைவ வேளாளர்கள் என ஏனைய வேளாளர் சமூகத்தினரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப் படுத்துகின்றனர். அதேவேளை சைவ கோயில்களில், கோயில் குருக்கள்களாகவும் இவர்கள் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. இலங்கை யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை, வேளாளர்கள் என பொதுவாக அடையாளப் படுத்திக்கொண்டவர்கள், கிருத்துவ சமயத்தின் வருகையைத் தொடர்ந்து, கிருத்துவ சமயத்திற்கு மாறியவர்கள் தம்மை கிருத்துவ வேளாளர் என ஒரு தனித்த உட்பிரிவாக அடையாளப்படுத்திக்கொண்டனர். அதேவேளை அவர்களில் இருந்து வேறுபடுத்திக் காட்ட, தொடர்ந்து சைவ சமயத்தை பின்பற்றி வந்த வேளாளர்கள், தம்மை சைவ வேளாளர் என அடையாளப் படுத்திக்கொண்டனர்.
தமிழ்நாடு அரச இட ஒதிக்கீடு
இவர்கள் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், முற்பட்ட பிரிவில் உள்ளனர். இவர்களை வட தமிழகத்தில் சைவ முதலியார் என்றும் தென் தமிழகத்தில் சைவப் பிள்ளை என்றும் அழைப்பர்.
குறிப்பிடத்தக்க நபர்கள்
- வ. உ. சிதம்பரனார் - இந்தியா விடுதலைப் போராட்ட வீரர்.
- எம். பக்தவத்சலம் - முன்னாள் தமிழக முதலவர்
- பி. டி. ராஜன்- முன்னாள் சென்னை மாகாண முதலவர்
- முத்தையா முதலியார் - முன்னாள் அமைச்சர்
- இரா. நெடுஞ்செழியன் - முன்னாள் திமுக பொதுச் செயலாளர்
- க. அன்பழகன் - முன்னாள் திமுக பொதுச் செயலாளர்
- முத்துரங்க முதலியார் - இந்தியா விடுதலைப் போராட்ட வீரர்
- பி. டி. ஆர். பழனிவேல்ராசன்
- கே. எஸ். ரவிக்குமார் - திரைப்பட இயக்குனர்
- கா. சு. பிள்ளை - தமிழறிஞர்
- பழனிவேல் தியாகராசன்
இதனையும் காண்க
- முதலியார்