Ravi azad

Indian social activist
The basics

Quick Facts

IntroIndian social activist
PlacesIndia
isSocial worker
Gender
Male
Birth9 August 1991
Age33 years
Star signLeo
The details

Biography

இரவி ஆசாத் (Ravi azad) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் ஆவார். அரியானா , தில்லி மற்றும் இராசத்தான் மாநிலங்களில் அநீதியை எதிர்கொள்ளும் விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளிகளால் எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். அரியானா பிரதேசத்தில் பாரதிய கிசான் ஒன்றியத்தின் இளைஞர் தலைவராகவும் உள்ளார். அரியானா மாநிலத்தில் 2020-2021 இந்திய விவசாயிகள் போராட்டம் என்ற ஓர் இயக்கத்தை இவர் நடத்தினார்.

வாழ்க்கை குறிப்பு

இரவி ஆசாத் 1991 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 9 ஆம் தேதி அரியானா பிரதேசத்தின் பிவானி மாவட்டத்தில் உள்ள பகல் கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் செய் சிங் சக்வான் ஏன்பதாகும். ஆசாத் லோகாருவில் உள்ள ஜிடிசி மெமோரியல் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

செயல்பாடு

இரவி 2015 ஆம் ஆண்டு பாரதிய கிசான் சங்கத்தில் சேர்ந்தார். 2018- ஆம் ஆண்டு அரியானா இளைஞர் மாநிலத் தலைவராக ஆனார். அரியானா மாநிலத்தில் 2020-2021 இந்திய விவசாயிகள் போராட்டம் என்ற ஓர் இயக்கத்தை நடத்தினார். அரியானா காவல்துறை 24 வழக்குகளை இவர் மீது பதிவு செய்துள்ளது இராசத்தான் காவல்துறை ஆசாத் போராட்டம் நடத்தியதற்காக 1 வழக்கை பதிவு செய்துள்ளது. ஜீ ஊடக ஆணையத்தின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுபாசு சந்திராவை மிரட்டியதாகக் கூறி அரியானா காவல்துறையினர் இவரை கைது செய்தனர்.

மேற்கோள்கள்

The contents of this page are sourced from Wikipedia article on 25 Jan 2024. The contents are available under the CC BY-SA 4.0 license.