Losliya Mariyanesan

Tamil film actress
The basics

Quick Facts

IntroTamil film actress
isActor Film actor
Work fieldFilm, TV, Stage & Radio
Gender
Female
Birth23 March 1996
Age28 years
Star signAries
The details

Biography

லொஸ்லியா மரியநேசன் (பிறப்பு: 23 மார்ச்சு 1996) என்பவர் இலங்கையைச் சேர்ந்த தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். இவர் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபற்றினார். இவர் நடித்த முதல் திரைப்படம் பிரண்ட்ஷிப் 2021 செப்டம்பர் 17 இல் வெளியானது.

ஆரம்ப வாழ்க்கை

லாஸ்லியா இலங்கையின் கிளிநொச்சியில் ஒரு கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயும், தந்தையும் இலங்கையின் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள். பின்னர் அவர்கள் திருக்கோணமலைக்கு இடம்பெயர்ந்தனர். இவர் தன் கல்வியை திருக்கோணமலையில்  தொடர்ந்தார். இவர் நான்கு ஆண்டுகளாக கொழும்பில் வசித்து வந்தார்.

தொழில் வாழ்க்கை

2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை சக்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் கடமையாற்றினார். பின்னர் தன் பணியில் இருந்து விலகி 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் 3 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார்.

2020 ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியை திரைப்படத்துறையில் அறிமுகமானார். இந்த திரைப்படம் 2021 செப்டம்பர் 17 இல் திரையரங்குகளில் வெளியானது. இவர் 'ப்ளேஸ்ஸோ' என்ற சோப்பு விளம்பரங்களில் நடித்துள்ளார்.

தொலைக்காட்சி

ஆண்டுதலைப்புகதாபாத்திரம்அலைவரிசைகுறிப்புகள்
2015 - 2018குட் மோர்னிங் ஸ்ரீ லங்காதொகுப்பாளர்சக்தி தொலைக்காட்சி
2016பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிஒரு அத்தியாயம் மட்டும்
2018 - 2019நியூஸ் பேஸ்ட்செய்தி வாசிப்பாளர்
2019பிக் பாஸ் தமிழ் 3போட்டியாளர்விஜய் தொலைக்காட்சி
2020ஸ்டார்ட் மியூசிக் 2விருந்தினராகஒரு அத்தியாயம் மட்டும்

திரைப்படம்

ஆண்டுபடம்கதாபாத்திரம்குறிப்புகள்
2021பிரண்ட்ஷிப்அனிதா
2022கூகுள் குட்டப்பாதரணி

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

The contents of this page are sourced from Wikipedia article on 10 Jul 2024. The contents are available under the CC BY-SA 4.0 license.