Biography
Lists
Also Viewed
Quick Facts
Intro | Sri Lankan Tamil writer |
Places | Sri Lanka |
was | Writer |
Work field | Literature |
Birth | 1 August 1946, Kuppilan, Jaffna District, Northern Province, Sri Lanka |
Death | 24 April 2023Jaffna, Jaffna District, Northern Province, Sri Lanka (aged 76 years) |
Star sign | Leo |
Biography
குப்பிழான் ஐ. சண்முகன் (1 ஆகத்து 1946 – 24 ஏப்ரல் 2023) என்பவர் ஓர் ஈழத்து எழுத்தாளர். சிறுகதை, கவிதை, திறனாய்வு, ஆன்மீகம் எனப் பல துறைகளில் எழுதியவர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைப்பட்டம் பெற்ற இவர் ஓர் ஆசிரியர். அலையின் ஆரம்ப ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
குப்பிழான் ஐ. சண்முகனின் இயற்பெயர் ஐ. சண்முகலிங்கம். இவர் யாழ்ப்பாணம் மாவட்டம், சுன்னாகம், குப்பிழான் என்ற ஊரில் ஐயாத்துரை, இரத்தினம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். குப்பிழான் வினேசுவரா வித்தியாலயம், புன்னாலைக்கட்டுவன் மெதடித்த மிசன் ஆங்கிலப் பாடசாலை ஆரம்பக் கல்வியையும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும் பயின்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப் பட்டம் பெற்றார். 1968 முதல் அரசத் திணைக்களங்களில் எழுத்தராகப் பணியாற்றி, பின்னர் 1984 முதல் 22 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
எழுத்துப் பணி
இவரது முதலாவது சிறுகதை "பசி" ராதா என்ற வார இதழில் வெளிவந்தது. தொடர்ந்து பல ஆக்கங்கள் பல்வேறு இதழ்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. 1975 இல் வெளியான இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு "கோடுகளும் கோலங்களும்" சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது.
உயர்தர வகுப்பு மாணவனாக இருந்த போது இவர் சிலோன் விஜயேந்திரன், மாவை நித்தியானந்தன் ஆகியோரோடு இணைந்து "யாழ் இலக்கியக் கழகம்" என்ற அமைப்பின் மூலமும், பின்னர் ஐ. சாந்தன், அ. யேசுராசா போன்றோரோடு சேர்ந்து "கொழும்பு இலக்கியக் கழகம்" மூலமும் இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
இவரது நூல்கள்
- கோடுகளும் கோலங்களும் (சிறுகதைகள் - 1976)
- சாதாரணங்களும் அசாதாரணங்களும் (சிறுகதைகள் - 1983)
- அறிமுகங்கள் விமர்சனங்கள் குறிப்புக்கள் (2003)
- உதிரிகளும்... (சிறுகதைகள், 2006)
- ஒரு பாதையின் கதை (சிறுகதைகள், 2012)
- பிரபஞ்ச சுருதி (கவிதைகள், 2014)
- ஒரு தோட்டத்தின் கதை (சிறுகதைகள், 2018)
விருதுகள்
- சாகித்திய மண்டலப் பரிசு, 1976 ("கோடுகளும் கோலங்களும்" சிறுகதைத் தொகுப்பு)
- சங்கச் சான்றோர் பட்டம் (பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ் சங்கம்)
மறைவு
குப்பிழான் ஐ. சண்முகன் 2023 ஏப்ரல் 24 அதிகாலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனது 77 ஆவது அகவையில் காலமானார்.