Kalaignanam

�����மிழ்த் திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர்
The basics

Quick Facts

Intro�����மிழ்த் திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர்
PlacesIndia
isScreenwriter
Work fieldFilm, TV, Stage & Radio
Gender
Male
BirthElumalai, India
The details

Biography

கலைஞானம், (இயற்பெயர்:கே. எம். பாலகிருஷ்ணன்), தமிழ்த் திரைப்படக் கலைஞர் ஆவார். இவர் 1960 - 1990 வரை 200 திரைப்படங்களுக்கு திரைக்கதை, 40 திரைப்படங்களுக்கு கதை எழுதி, 18 திரைப்படங்களை தயாரித்தவர். மேலும் இவர் திரைப்பட இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் எனப் பன்முகத்தன்மைப் படைத்தவர்.

வாழ்க்கை

மேடை நாடகங்கள்

இவர் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம், எழுமலையில் பிறந்து வளர்ந்தவர். இவர் தனது 18-வது வயதில் 1949-இல் திமுக தலைவர் ஏ. வி. பி. ஆசைத்தம்பி எழுதிய வாழ்க்கை வாழ்வதற்கே எனும் நாடகத்தில் முதன்முதலாக நடித்தவர்.

திமுக உருவாகிய அக்காலக் கட்டத்தில் கருணாநிதியின் விஷக்கோப்பை, நச்சுக்கோப்பை போன்ற நாடகங்களில் நடித்தவர். இவரது மூத்த சகோதரர் ஆர். எம். கிருஷ்ணசாமியும் ஒரு மேடை நாடகக் கலைஞர் ஆவார்.

நாடக மேடையிலிருந்து தமிழ்த் திரைத் துறைக்கு சென்ற கலைஞானம், தமிழரசுக் கழகத் தலைவர் ம. பொ. சிவஞானம் தி.மு.க வை எதிர்த்து அமைத்த பிரசார நாடகமான எழுச்சிக்கடல் நாடகத்தில் வில்லனாக நடித்தார்.

திரைப்படங்கள்

இவர் 1966-இல் காதல் படுத்தும் பாடு படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதினார். சின்னப்பத் தேவரின் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராக பணியாற்றிவர். பின்னர் 1978-இல் ரஜினிகாந்த் நடித்த பைரவி திரைப்படத்தை தயாரித்துள்ளார். இவர் ரஜினிகாந்த் நடித்த ஆறு புஷ்பங்கள் (1977) மற்றும் அல்லி தர்பார் (1978) போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

குறத்தி மகன், புதிய தோரணங்கள் போன்ற திரைப்படங்களை தயாரித்தும், நெல்லிக்கனி திரைபடத்தை தயாரித்துள்ளார். 1986-இல் சிவாஜி கணேசன் நடிப்பில் இவர் தயாரித்த மிருதங்க சக்கரவர்த்தி திரைப்படம் பெருத்த பண இழப்பு ஏற்பட்டது.

நடித்த திரைப்படங்கள்

  • இது நம்ம ஆளு

எழுதிய நூல்கள்

சினிமா துறையில் அரை நுாற்றாண்டைக் கடந்த இவர், தன் திரைப்பட அனுபவங்களக் கொண்டு எழுதிய, சினிமா சீக்ரெட் எனும் நூலை மூன்று தொகுதிகளாக வெளியிட்டவர்.

மேற்கோள்கள்

  1. 'திரைஞானி' கலைஞானம்
  2. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/511564-rajini-kalaignanam.html
  3. பைரவி தயாரிப்பாளர் கலைஞானம்

வெளி இணைப்புகள்

The contents of this page are sourced from Wikipedia article on 21 Feb 2020. The contents are available under the CC BY-SA 4.0 license.