Biography
Lists
Also Viewed
Quick Facts
was | Writer | |
Work field | Literature | |
Gender |
| |
Birth | 1929 | |
Death | 23 April 1992 (aged 63 years) |
Biography
சி. வடிவேலு (பிறப்பு: பிப்ரவரி 23 1929, இறப்பு: ஏப்ரல் 23 1992) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் கெடா அலோர்ஸ்டார் பட்டணத்தில் பிறந்து, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் வளர்ந்தார். இளமையில் ஒரு சிறந்த விளையாட்டாளராக திகழ்ந்ததுடன் தமிழாசிரியர் பணியில் ஈடுபட்டார். 1974-ஆம் ஆண்டிலிருந்து 1980ஆம் ஆண்டு ஏழு ஆண்டுகள் மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்தார். பின்பு நெகிரி செம்பிலான் தமிழ் எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கி நான்கு ஆண்டுகள் (1983-1986) வரை தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1949 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதை கட்டுரை சிறுகதைகளையே எழுதி வருகின்றார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மலேசிய மண்ணின் மணத்தையும் வளத்தையும் தொட்டு இலக்கியம் வளரத் தொடங்கிய காலத்திலே எழுதத் தொடங்கியவர்களில் ஒருவரான இவர் மலேசியாவில் தமிழ்ச் சிறுகதையைப் பற்றிப் பேசப்படும்போது, முதலில் நினைவுக்கு வரவேண்டியவராக உள்ளார்
நூல்கள்
- வள்ளுவனின் காதலி
- இருண்ட உலகம்
- புதிய பாதை
உசாத்துணை
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் சி. வடிவேலு பக்கம் பரணிடப்பட்டது 2012-01-19 at the வந்தவழி இயந்திரம்