Bharathi Baskar
Tamil orator
பாரதி பாஸ்கர் என்பவர் தமிழ்ப் பேச்சாளர். சன் தொலைக்காட்சி நடத்தும் பட்டி மன்ற நிகழ்ச்சி மூலமாகப் பிரபலமானவர். 'வாங்க பேசலாம்' என்னும் சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
சென்னை அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரியில் வேதிப்பொறிஞர் பட்டமும், அண்ணா பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை முதுகலைப் பட்டமும் பெற்றார். சிட்டி வங்கியில் துணைத் தலைவர் பதவியில் இருந்து பணி செய்கிறார்.
கல்கியில் சிறுகதைகள், தினமணியில் கட்டுரைகள், அவள் விகடனில் 'நீ நதி போல ஓடிக்கொண்டிரு' என்ற தொடர்கட்டுரையும் எழுதியுள்ளார்.